
நான் ஹீரோயின் இல்லை... காமெடியன் : ராஷி கண்ணா ஓபன் டாக்
இந்தநிலையில் அவர் தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக நடித்துள்ள பக்கா கமர்சியல் என்கிற படத்தில் இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆம்.. இயக்குனர் மாருதி இயக்கியுள்ள இந்த படத்தில் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷி கண்ணா. இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஷி கண்ணா, இதுவரை நடித்திராத விதமாக இந்த படத்தில் முழுநீள நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளதுடன் வசன உச்சரிப்புகளையும் வித்தியாசமான பேசி நடித்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோயின் என்று சொல்வதைவிட காமெடியன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டார் ராஷி கண்ணா.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள ராஷி கண்ணா நடித்த காட்சிகளை பார்க்கும்போது அவர் சொல்வது உண்மை தான் என்றே தோன்றுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!