
வைஷ்ணவியை பின்தொடரும் மர்ம நபர் : போலீசில் புகார்
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் நான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி வீட்டு வாசல் வரை வந்து என்னை தொந்தரவு செய்கிறார். அந்த மர்ம இளைஞர் என்னை மிரட்டுவதைபோல பின்தொடர்ந்து வருகிறார், நான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வெளியே சென்று 30 நிமிடம் வரை வீட்டுக்கு செல்லாமல் வெளியில் காத்திருந்து பின்னர் வீட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். என்று அவர் கூறியிருக்கிறார்.
அதோடு பின் தொடரும் நபர் பற்றிய வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். வைஷ்ணவியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இது போன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செய்தியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை போலீசார் சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!