
அக்ஷய்குமாருடன் நடித்த சூர்யா - வைரலாகும் புகைப்படம்
இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் செய்தி பரவியது . இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்ஷய்குமாருடன் இருக்கும் போட்டோவை சூர்யா பகிர்ந்து அவருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதை சூர்யாவே உறுதி செய்துள்ளார்.
சூர்யா கூறுகையில், "அக்ஷய் குமார் உங்களை வீர்-ஆக ஏக்கத்துடன் பார்த்தேன். எங்கள் கதையை அழகாக மீண்டும் உயிர்ப்புடன் உருவாக்குகிறார் சுதா கொங்கரா. ஒவ்வொரு நிமிடத்தையும் சூரரைப்போற்று ஹிந்தி குழுவுடன் ரசித்தேன். ஒரு சிறிய சிறப்பு தோற்றத்துடன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!