மதங்களை கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும் : சாய்பல்லவி
ஜூன் 15, 2022
Advertisement
விராட பர்வம் படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி அடுத்து, கார்கி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமென நடித்து வருகிறார். இந்த நிலையில் விராட பர்வம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், ‛‛வன்முறை எனக்கு பிடிக்காது. வன்முறை மூலம் சாதிக்க முடியும் என நம்பவில்லை. முடிந்தவரை யாரையும் காயப்படுதாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அதை மத மோதல்களாக பார்க்கிறோம். சமீபத்தில் மாடுகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது, அதன் டிரைவர் முஸ்லிம் என்பதற்காக அவரை அடித்து, கொன்று ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். மதங்களைக் கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும்"" என்றார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து வைரலாகி வருதுடன் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!