
ஆகஸ்டு 18ல் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்
ஜூன் 15, 2022
Advertisement
யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனுஷ் வைத்து இயக்கி உள்ள படம் திருச்சிற்றம்பலம். தனுசுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்டு 18ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!