
வைரலாகும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ; எடுத்தது யார் தெரியுமா ?
இப்போது அல்ல.. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பாகவே குறும்படங்களில் நடித்து வந்த காலகட்டத்தில் அல்போன்ஸ் புத்ரனுடன் நெருக்கமான நட்பில் இருந்து வந்தவர். அப்போதே விஜய்சேதுபதியின் விதவிதமான தோற்றங்களை புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் இயக்குனராவதற்காக முயற்சி செய்துவந்த அல்போன்ஸ் புத்ரன். அப்படி 2010-ல் தான் எடுத்த விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.. இந்த புகைப்படம் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!