
தி கிரேமேன் - ஹாலிவுட் படத்தில் தனுஷ் பெயர் என்ன தெரியுமா?
ஜூன் 15, 2022
Advertisement
நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் படம் "தி கிரே மேன்". மார்க் கிரேனி என்பவர் எழுதிய "தி கிரே மேன்" என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். ஜூலை 22-ம் தேதி தி கிரே மேன் திரைப்படம் உலகளவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் கதாபாத்திர பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவிக் சென் என்ற பெயரில் தனுஷ் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!