
புரமோஷனுக்காக சீரியலில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி
இதற்கு முன்பு தங்களுடைய வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திய சிலரது வீட்டிற்கு திடீரெனச் சென்று சர்ப்ரைஸ் அளித்தார் பாலாஜி. அடுத்து படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து கொள்ள அழைத்தார். நள்ளிரவு வரை ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். படம் வெளியாகும் தியேட்டர்களில் சீமந்தம் செட் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.
அடுத்து இப்படத்தின் புரமோஷனுக்காக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "புதுப்புது அர்த்தங்கள்" தொடரில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அத்தொடரில் நடிகை தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் பாலாஜி, அபர்ணா நடித்துள்ள காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகிறது. ஒரு படத்தின் பிரமோஷனுக்காக அதன் நாயகன், நாயகி டிவி தொடரில் நடிப்பது, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவே முதல் முறை.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!