
ஜூலை முதல் புஷ்பா 2 படப்பிடிப்பு ஆரம்பம்
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் திட்டமிட்டனர். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு மேலும் மெருகூட்ட கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத ஆரம்பித்தார் சுகுமார். இதற்காக சில மாதங்களை அவர் எடுத்துக் கொண்டார். தற்போது படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டார்களாம்.
அதனால், ஜூலை மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். அதற்காக அல்லு அர்ஜுன் இப்போதே தன்னை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகவும், அதிக பொருட்செலவிலும் எடுக்கப்பட உள்ளதாகச் சொல்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!