
அமெரிக்காவின் டைம் ஸ்கொயரில் மாதவன் படம்
ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே, ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையான, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் இந்தப் படத்தின் டிரைலர் ஒளிபரப்பட்டது. அப்போது ஏராளமான இந்தியர்கள் அதை கண்டு களித்தனர். அவர்களுடன் மாதவனும், விஞ்ஞானி நம்பி நாராயணனும் அங்கே இருந்தார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!