மீண்டும் இணைந்து இசையமைக்கும் இளையராஜா - யுவன்
ஜூன் 13, 2022
Advertisement
இளையராஜாவும் அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசையமைத்தார்கள். அப்படத்தை சீனுராமசாமி இயக்கி இருந்தார். இந்த படம் ஜூன் 24ல் வெளியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இருவரும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்திற்கு இணைந்து இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு, மன்மதலீலை படங்களை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் தனது புதிய படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. ஜூன் 23ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திற்குதான் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!