
3 மொழிகளில் தயாராகும் மதராஸி கேங்
படத்தில் நடிப்பது குறித்து அனன்யா ராஜ் கூறியதாவது: மும்பை நகரில் உள்ள மூன்று கும்பல்களைப் பற்றிய கதை. குறிப்பாக தாதர் மற்றும் சிவாஜி பூங்கா இடையேயான பகுதிகளை மையமாகக் கொண்டது. நிறைய சேரிகள் உள்ளன, இங்குதான் இந்த கும்பல்கள் உள்ளன. அப்பகுதியில் வலுவான கேங்காக உருவெடுத்த மதராஸி கேங்கின் கதை இது.
என்னுடைய கேரக்டரின் பெயர் சரிதா, சேரிகளில் வளர்ந்தவள். மகாராஷ்டிரா கேங்கை சேர்ந்தவள். கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் காதலியாக நடித்திருக்கிறேன். உண்மையில் மூன்று மொழிகளில் படமாகி உள்ளது. தமிழில் பேசுவது கடினமாக இருந்தது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. விரைவில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் அனன்யா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!