
ரஜினி படத்தை இயக்குவார் ஆர்ஜே.பாலாஜி: ஊர்வசி நம்பிக்கை
இந்த படத்தின் நாயகியாக ஊர்வசி நடித்துள்ளார். நாயகனாக சத்யராஜ நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, பவித்ரா, கேபிஏசி லலிதா உள்படபலர் நடித்திருக்கிறார்கள். வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஊர்வசி பேசியதாவது: என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. இந்த படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நடிகரை புரிந்து கொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர்ஜே பாலாஜி. பழைய சத்யராஜ்யை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவரா பாலாஜி மாறிவிட்டார். இயக்கவும் செய்வார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குனர்கள் உருவாக்குகினார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு ஊர்வசி பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!