
ரூ.300 கோடியை நோக்கிப் பயணிக்கும் விக்ரம்
இப்போது "விக்ரம்" படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் படமாக இடம் பிடிக்க உள்ளது. அதே சமயம் முதலிடத்தில் உள்ள படத்தைக் காட்டிலும் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது. இப்படம் தற்போது தமிழகத்தில் 110 கோடி, கேரளாவில் 25 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் 22 கோடி, கர்நாடகாவில் 17 கோடி, வெளிநாடுகளில் 90 கோடி, வட இந்தியாவில் 6 கோடி என மொத்தமாக 270 கோடி வசூலைக் கடந்துள்ளது.
வார இறுதி நாட்களான நேற்றும், இன்றும் இப்படம் பெரும்பாலும் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. அதனால், அடுத்த சில நாட்களில் இப்படம் 300 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த படம் ஒன்று இந்த அளவிற்கு வசூலைக் குவித்து புதிய சாதனையைப் படைப்பது தமிழ்த் திரையுலகினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!