
திருமணம் முடித்த கையோடு திருப்பதியில் விக்கி - நயன் வழிபாடு
இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். இந்த போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!