
இந்த வாரப் போட்டியில் டப்பிங் படங்கள் மட்டுமே…
தொடர்ந்து இடைவிடாமல் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இந்த வாரம் நேரடி தமிழ்ப் படங்களுக்கு சற்றே இடைவெளி வரும் எனத் தெரிகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை ஜுன் 10ம் தேதியன்று குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக டப்பிங் படங்களான "அடடே, சுந்தரா" மற்றும் "777 சார்லி" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள படம் "அடடே, சுந்தரா". நானி, நஸ்ரியா, நதியா, ரோகிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வரும் படம் "ரரர சார்லி". ரக்ஷித், சங்கீதா சிருங்கேரி, சார்லி என்ற நாய் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த வாரம் இந்த இரண்டு டப்பிங் படங்களுக்கு இடையேதான் போட்டி நிலவப் போகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!