
விக்ரம் - ரோலெக்ஸிற்கு ரோலெக்ஸ் கடிகாரம் பரிசளித்த கமல்
நேற்று இயக்குனர் லோகேஷிற்கு சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான லெக்ஸ் ரக காரை பரிசாக அளித்தார். அவரின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்தார். இந்நிலையில் இன்று இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலெக்ஸ் என்ற வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு உயர் ரக கை கடிகாரங்களில் ஒன்றான ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக வழங்கி உள்ளார் கமல். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, இது மாதிரியான தருணங்கள் வாழ்க்கையை அழகாக்கின்றன"" என கூறியுள்ளார். இது தொடர்பான போட்டோக்களை வெளியாகி வைரலாகி வருகின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!