
கேரளா வசூலில் புதிய சாதனை படைத்த விக்ரம்
இதற்கு முன்பு வெளியான தமிழ்ப் படங்களில் விஜய் நடித்த "பிகில், மெர்சல், தெறி" படங்களும், ரஜினிகாந்த் நடித்த "2.0, கபாலி" படங்களும், விக்ரம் நடித்த "ஐ" படமும் 15 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் சாதனைகளை தற்போது கமல்ஹாசன் நடித்து வெளிவந்த "விக்ரம்" படம் முறியடித்துள்ளது.
நான்கு நாட்களில் கேரளாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான வசூலை "விக்ரம்" படம் பெற்றுள்ளது. எப்படியும் 30 கோடி வசூலைத் தாண்டும் என்று சொல்கிறார்கள். இப்படத்தில் மலையாளத்தில் பல வருடங்களாகத் தெரிந்த நடிகரான கமல்ஹாசன் உடன், மலையாள நடிகரான பகத் பாசில் இருப்பதுதான் இப்படியான வசூலுக்குக் காரணம் என்கிறது மல்லுவுட்.
ரஜினிகாந்த், விஜய், விக்ரமைக் காட்டிலும் மலையாளத்தில் 40 வருடங்களுக்கு முன்பு சில பல வெற்றிப் படங்களில் நடித்த கமல்ஹாசன் படம் தற்போது நம்பர் 1 சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!