
விக்ரம் படத்தை இரண்டாவது முறை பார்த்த த்ரிஷா
கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.
கமல்ஹாசனுடன் "மன்மதன் அம்பு" படத்தில் ஜோடியாக நடித்த த்ரிஷா "விக்ரம்" படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறார். சென்னையில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் தனது தோழிகளுடன் படத்தைப் பார்த்த த்ரிஷா, படத்தின் என்ட் டைட்டிலை வீடியோவாக எடுத்து எஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்து "ரவுண்ட் 2, விக்ரம்" என பயர் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!