
இந்து முறைப்படி நயன்தாரா உடன் திருமணம் - விக்னேஷ் சிவன் அறிவிப்பு
இந்நிலையில் திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் கூறுகையில், ‛‛வருகிற ஜூன் 9ல் எங்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. திருப்பதியில் தான் செய்ய நினைத்தோம். ஆனால் நிறையபேரை அழைத்து சென்று அங்கு நடத்த முடியாத சூழலால் சென்னையில் நடத்துகிறோம். ஜூன் 11ல் தம்பதியராய் பத்திரிக்கையாளர்களாகிய உங்களை சந்திக்கிறோம்"" என்றார்.
நடிகை நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தை பின்பற்ற துவங்கினார். தொடர்ந்து பல இந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, கிட்டத்தட்ட இந்து பெண்ணாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!