பிரிட்டிஷ் நடிகருடன் திருமணத்திற்கு தயாராகும் எமிஜாக்சன்
Advertisement
Advertisement
பிரிட்டிஷ் நடிகருடன் திருமணத்திற்கு தயாராகும் எமிஜாக்சன்
ஜூன் 06, 2022
அ நிறம் | அளவு
Advertisement
ஆர்யா நடிப்பில் ஏ.எல்.விஜய்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் என்ற படத்தில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன் அதன் பிறகு 2.ஓ, தெறி , தங்க மகன் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தொழிலதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோ என்பவரை காதலித்த எமிஜாக்சன் அவருடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். திடீரென ஜார்ஜை விட்டு பிரிந்தார் எமி ஜாக்சன். அதையடுத்து பிரிட்டிஷ் நடிகர் எட்வெஸ்ட் விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வந்தார். அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன்- எட் வெஸ்ட்விக் ஆகிய இருவரின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதோடு எமி ஜாக்சனும் தனது புதிய காதலருடன் தொடர்ந்து டேட்டிங் செய்வதோடு, அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும்பதிவிட்டு வருகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!