
ஜாதி அடையாளம், சர்ச்சை வசனத்துடன் வெளியானது காடுவெட்டி டீசர்
இந்த டீசரில் குறிப்பிட்ட ஜாதி அடையாளங்கள், வன்முறை காட்சிளும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அதோடு "கையில் அரிவாளுடன் இருக்குற சாமிய கும்பிடுகிற எங்ககிட்ட வச்சு கிட்டா, அரிவாளைத்தான் எடுப்போம், "உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்கதான் கிடைச்சதா? என்கிற வசனத்துடன் ஒரு கெட்ட வார்த்தையும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக வெளியாகும் படங்களின் டீசர்களில் இதுமாதிரியான கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெற துவங்கி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!