
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?
ஜூன் 04, 2022
Advertisement
தெலுங்கில் சாகுந்தலம், யசோதா , குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி, அட்லி இயக்கிய தெறி, மெர்சல் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67வது படத்தில் அவர் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் நான்காவது படமாகி விடும்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!