
ஐஸ்வர்யா ராஜேஷ் வெப் தொடர்: 17ம் தேதி வெளியாகிறது
தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகி உள்ளது. பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகிற 17ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது எட்டு. எபிசோட்கள் கொண்ட தொடராக வெளிவருகிறது. காணாமல் போன ஒரு பெண் குழந்தை பற்றிய தேடலில் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய தொடர்.
புஷ்கர்-காயத்ரி கூறியதாவது: பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். சுழல் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. என்றார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!