
இளையராஜா அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் சில பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அவரது பதிவில், ‛இந்த சிறப்பு நாளில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு அற்புதமான மற்றும் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது" எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ‛டபுள்" ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!