
கமல்ஹாசன் மாதிரி நடிக்க எந்த நடிகருக்கும் தைரியம் இல்லை : நடிகர் வெங்கடேஷ்
இந்நிலையில் நேற்று தெலுங்கில் படத்தின் பிரஸ் மீட் நிகழ்வு நடைபெற்றது. விக்ரம் படத்தை நடிகர் நிதின் குடும்பத்தினர் தெலுங்கில் வெளியிடுகின்றனர். விழாவில் நிதின், வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய வெங்கடேஷ் “ஒவ்வொரு நடிகருக்கும் மரோ சரித்ரா ஒரு ஜி.பி.எஸ். தசாவதாரம் போன்ற படம் பண்ணும் தைரியம் வேண்டும். ஆனால் இப்போது எந்த நடிகருக்கும் இல்லை. கமல் சார் ஒரு சிறந்த நடிகர். ஏக் துஜே கே லியே மூலம் அவர் முதல் பான் இந்தியா ஸ்டார் ஆனார். இன்று, அவர் தனது ஒப்பற்ற திறமையால் உலகளாவிய நட்சத்திரமாக இருக்கிறார். கமல் சார் ஒரு அதிசயம். அவருக்கு இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!