
வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்திய பூர்ணா
பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “குடும்பத்தினரது ஆசீயுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அதிகாரப்பூர்வமாக,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூர்ணா திருமணம் செய்ய இருக்கும் நபர் பெயர் சானித் ஆசிப் அலி. துபாயில் தொழிலதிபராக உள்ளார். தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது.
மலையாளத்திலிருந்து வந்து இங்கு நம்பர் 1 நடிகையாக உள்ள நயன்தாரா திருமண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பூர்ணா அவரது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!