
புகழ் பெயரில் பணமோசடி : அவரே வெளியிட்ட தகவல்
இதுகுறித்து புகழ் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது : நான் ஈரோடு, மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதாக கூறி, எனது பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல், எனது பெயரை உபயோகித்து அவர்கள் பணம் வசூலிப்பதாகவும் தெரிய வருகிறது.
தயவு செய்து யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பவும் வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே வீடியோ வெளியிடுவேன். நான் தற்போது படப்பிடிப்புக்காக பிலிப்பைன்ஸில் இருப்பது அனைவருக்கும் தெரியும். தயவு செய்து யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே உறுதி செய்கிறேன். என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!