
கேன்ஸ் விருது வென்ற இந்திய ஆவணப்படம்
நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து விருதுகளையும் மேற்கத்திய நாட்டு படங்களே வழக்கம்போல அள்ளிச் சென்றது. முதன் முறையாக ஒரு பாகிஸ்தானி படம் விருது வென்றது. இந்தியாவை பொருத்தவரை ஷானக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற ஆவணப்படம் விருது பெற்றது. அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டில்லி மாசடைந்து வருவது குறித்தும், அந்த மாசுக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பருந்தையும், அந்த பருந்தை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றியும் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய அளவில் ஏற்கெனவே பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம், தற்போது கேன்ஸ் விருதையும் வென்றிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!