விருப்பமின்றி தனுஷ் உடன் நடித்தேன் - விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
விருப்பமின்றி தனுஷ் உடன் நடித்தேன் - விக்னேஷ் சிவன்
மே 29, 2022
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குனர் விக்னேஷ் சிவன், பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2014ல் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சமுத்திரகனி, சரண்யா நடித்த ‛வேலையில்லா பட்டதாரி" படத்தில் தனுஷ் உடன் பணிபுரியும் சிவில் இன்ஜினியராக சிறிய ரோலில் நடித்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இந்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் இப்போது விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது : ‛‛எனக்கு நடிப்பில் பெரிதாக ஆர்வமில்லை. வேலையில்லா பட்டதாரி படத்தில் விருப்பமில்லாமல் தான் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் வேறொருவர் நடிக்க வேண்டியது. அன்றைக்கு அவர் வரவில்லை. வேறு வழியின்றி நான் தான் நடிக்கணும் என தனுஷ் அந்த ரோலில் என்னை நடிக்க வைத்தார்"" என்றார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!