
காத்துவாக்குல ரெண்டு காதல், 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு
படம் வெளியாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். “எங்களது பணியில் திருப்தி அடைவதற்குப் போதுமான காரணங்களைத் தந்ததற்காக, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி. உங்களை மனதில் வைத்து ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம். நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் உங்கள் அன்பைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு எப்போதும் நன்றியுள்ளவள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் அடுத்த படமாக "மாமனிதன்" படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. நயன்தாரா நடித்து அடுத்த படமாக "ஓ 2" ஓடிடியில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!