
ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இதுவரை வெளியான ராம்சரணின் லுக்கும் அதை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. தமிழில் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் அருண்பாண்டியன் நடிப்பில் அதிகாரி என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!