தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம்
மே 25, 2022
Advertisement
தனுஷ் நடிப்பில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போற்ற படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். மீண்டும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுசுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரிய பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படம் தொடங்கப்பட்ட நிலையில் தனுஷின் 39வது பிறந்தநாளான வருகிற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தனுஷ் வில்லனாக நடித்துள்ள தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படம் ஜூலை 22ல் ஓடிடியில் வெளியாகிறது. இப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!