
குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
இதுபற்றிய தகவலை தெரியப்படுத்தியுள்ள இயக்குனர் சிவா நிர்வனா, படப்பிடிப்பு சிறப்பாக இதை பெற்றதற்காக விஜய் தேவரகொண்டா, சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக சமந்தா காஷ்மீரில் பல இடங்களை சுற்றிப்பார்த்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தாரே அது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமயத்தில்தான். அதேபோல விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தங்களது பிறந்த நாட்களையும் அங்கே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!