
மாநாடு வெற்றியை சுவைக்கும் காடு
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், "வெந்து தணிந்தது காடு" படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஏஆர் ரகுமான் இசை என்பது படத்திற்கு மற்றொரு பிளஸ் பாயின்ட். இப்படத்தின் வியாபாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம்.
டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக ஒரு தகவல். படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை , ஹிந்தி உரிமை 25 கோடிக்கும் விற்கப்பட்டுவிட்டதாம். இதன் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் அதில் பாதிதான் என்கிறார்கள். இந்த உரிமைகளிலேயே 25 கோடி லாபம் வந்துள்ளது. இன்னும் தியேட்டர்கள் உரிமைகளை விற்றால் அதில் ஒரு பெரும் தொகை கிடைக்கும்.
இவ்வளவுக்கும் காரணம் "மாநாடு" படத்தின் வெற்றிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். "மாநாடு" படத்தின் வெற்றியால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு இதுவரை வசூல் கணக்கை வினியோகஸ்தர்கள் தரவில்லை. அதே சமயம், அதன் வெற்றியால் சிம்புவின் அடுத்த வெளியீடான "வெந்து தணிந்தது காடு" படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதை ஆச்சரியமாகப் பார்க்கிறது கோலிவுட்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!