
தி லெஜண்ட் : ‛வாடி வாசல் பாடல் வெளியீடு ; மே 29ல் இசை வெளியீட்டு விழா
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மே 29-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதோடு, முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலரையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
‛வாடி வாசல்" பாடல் வெளியீடு
இதனிடையே இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் இப்போது இரண்டாவது பாடலமாக ‛வாடி வாசல்" என்ற வீடியோ பாடலை இன்று(மே 20) காலையில் வெளியிட்டனர். கிராமத்து பின்னணியில் திருவிழா மாதிரியான செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!