பிரபு சாலமனின் இயக்கத்தில் நடிக்கும் அஷ்வின்
மே 19, 2022
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி" மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். சில மாதங்களுக்கு முன்பு இவரது முதல் திரைப்படமான "என்ன சொல்ல போகிறாய்" வெளியானது. தற்போது அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. "மைனா", "கும்கி" படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமனுடன் தான் அஷ்வின் அடுத்த படம் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இப்படம் முழுவதுமே பேருந்துக்குள் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். நகைச்சுவை நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஸ் கண்டக்டராக தம்பி ராமையா நடிக்கிறாராம்.
பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு வரும் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!