
ரஷ்யாவில் வெளியாகிறது கைதி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் "கைதி" மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் "போலா" என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு மற்றொரு மைல்கல்லாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் கைதி படம் வெளியாகிறது. "உஸ்னிக்" என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். "உஸ்னிக்" படத்தினை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!