டான் வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்
மே 18, 2022
Advertisement
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் "டான்". இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைப் பெற்றதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடி உள்ளார்கள்.
நிகழ்வில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஷிவாங்கி, தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். "டான்" படம் தெலுங்கில் "காலேஜ் டான்" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. அங்கு சக்சஸ் மீட்டை இன்று நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
"டாக்டர்" படத்தைத் தொடர்ந்து "டான்" படத்தையும் வெற்றிப் படமாகத் தந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனால், அவருடைய அடுத்த படங்களுக்கான வியாபாரமும், எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!