
கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் இரவின் நிழல்
இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதுகுறித்து அவர் தனது தெரிவித்திருப்பதாவது: சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல்" திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன். என்று கூறியுள்ளார்.
கமல் நடித்த விக்ரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், "கமல் நடித்த படத்துடன் என் படமும் கேன்ஸ் விழாவில் திரையிடப்படுவதன் மூலம் நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்" என்று குறிப்பிட்டார். இதே விழாவில் மாதவன் இயக்கிய ராக்கெட்டரி படமும் திரையிடப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!