
ஹிந்தி ஒழிகனு சொல்ல மாட்டேன் ; ஆனால் தமிழுக்கு இடையூறு வந்தால் எதிர்த்து நிற்பேன் - கமல்ஹாசன்
இதில் கமல், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சிலம்பரசன், அக்ஷரா ஹாசன், உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது : "சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு யார் இடையூறாக வந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதற்கும், அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. ஹிந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். அதேசமயம் குஜராத்தி, சைனீஸ் மொழி பேசுங்க. ஆனா தமிழ் வாழ்க என்று சொல்வது கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை இந்த மேடையில் தனியாக ஒரு தம்பிக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கேன். கடைசி நேரத்தில் கைகொடுத்தவர் சூர்யா. அவருக்கு நன்றி" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!