
தமிழக முதல்வருக்கு மோகனின் ஹரா படக்குழு வைத்த கோரிக்கை
இந்த ஹரா படத்தில் தனது மகளுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் மோகன் விடுமுறை கேட்கும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். இப்படியான நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் இடத்திலும் ஹரா படக்குழு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதில், பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டில் இதுபோன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்திலும் பெண்களுக்கு மூன்று நாள் விடுமுறை அளித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!