
மீண்டும் விக்ரமை இயக்கும் அஜய் ஞானமுத்து
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்தபடியாக பா. ரஞ்சித் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மைதானம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக மீண்டும் கோப்ரா படத்தை இயக்கி உள்ள அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் கேப்ரா படம் வெளியானதும் அடுத்தபடியாக விக்ரமை வைத்து இயக்கும் அடுத்த படத்துக்கான கதை பணிகளை தொடங்கப்போகிறார் அஜய் ஞானமுத்து.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!