
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் இளையராஜா
சமீபத்தில் துபாயை தொடர்ந்து சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் அடுத்து கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் இளையராஜா. அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார்.
இதுபற்றி இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!