
எம்ஜிஆர், கருணாநிதி உடன் நடிகர் கார்த்தி : உசுப்பேற்றும் மதுரை ரசிகர்கள்
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். அவை பல வெற்றிப் படங்களாக அமைந்தது. சில படங்கள் தோல்வி அடைந்தது. என்றாலும் கார்த்தி தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் கூறி வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் வருகிற 25ம் தேதி அவருக்கு பிறந்தநாள் வருகிறது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த போஸ்டர்களில் எம்ஜிஆர் கருணாநிதி படங்கள் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் நடுவில் கார்த்தியும், பின்னணியில் சட்டசபை வளாக கட்டடமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.
விஜயகாந்தையும், ரஜினிகாந்தையும், கமல்ஹாசனயும் அரசியலுக்கு வரச்சொல்லி உசுப்பேற்றிய அதே மதுரை ரசிகர்கள் தான் இப்போது கார்த்தியையும் உசுப்பேத்தி இருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!