
2022ல் இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த கேஜிஎப் 2
ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த "கேஜிஎப் 2" படம் "ஆர்ஆர்ஆர்" படத்தின் இந்திய வசூல் சாதனையை முறியடித்து 2022ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை தட்டிப் பறித்தது. "ஆர்ஆர்ஆர்" படம் 44 நாட்களில் பெற்ற வசூலை 24 நாட்களிலேயே பெற்றது. இந்திய அளவில் "ஆர்ஆர்ஆர்" படம் 905 கோடி வசூலைப் பெற்றது. "கேஜிஎப் 2" படம் 930 கோடியைக் கடந்துள்ளது.
வெளிநாடுகளில் மட்டும் "ஆர்ஆர்ஆர்" படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலிக் குவித்துள்ளது. அதே சமயம் "கேஜிஎப் 2" படம் வெளிநாடுகளில் 180 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அந்த சாதனையை முறியடிக்க இன்னும் 20 கோடி வசூலித்தாக வேண்டும். அதையும் சில நாட்களில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
2022ம் ஆண்டில் "கேஜிஎப் 2" சாதனையை அடுத்து வரும் வேறு எந்த படமாவது முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!