சந்தோஷ் சிவன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மணிரத்னம்
Advertisement
Advertisement
சந்தோஷ் சிவன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மணிரத்னம்
மே 07, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தி, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது "சென்ட்டிமீட்டர்" எனும் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!