
சுசீந்திரன் இயக்கத்தில் 5 மொழி படத்தில் விஜய் ஆண்டனி
இந்த நிலையில் அவர் அடுத்து இயக்கும் படம் வள்ளிமயில். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஜதிரத்னலு தெலுங்கு படத்தில் நடித்த பிரியா அப்துல்லா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமய்யா, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. 1980களில் நடக்கிற மாதிரியான கதை. முதல்கட்ட படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் தொடங்குகிறது. இது ஓடிடிக்கான படம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!