கனா படத்தை அடுத்து அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. போனிகபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன்,ஷிவானி, மயில்சாமி உள்பட பலர் நடிக்க, திபு நினன் இசை அமைத்துள்ளார். ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக் இது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். படம் வருகிற மே 20ம் தேதி ரிலீஸாக உள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!