
டிரைவர் ஜமுனா : டூப் போடாமல் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் கின்ஸ்லி கூறியதாவது: இன்றைய சூழலில் ஏராளமான பெண்களும் கால் டாக்ஸி டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். பெண் டிரைவரின் ஒருநாள், ஒரு டிரிப்பை மையப்படுத்தியதுதான் டிரைவர் ஜமுனாவின் கதை. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக வாடகை காரை இயக்கும் பெண் ஓட்டுனர்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து உடல் மொழியையும், வாடிக்கையாளர்களின் மனநிலையையும் கேட்டறிந்த பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை உருவாக்குவார்கள். ஆனால் இந்தப்படத்தை நிஜமான சாலைகளில் படமாக்கினேம். ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல், அவரே வாகனத்தை வேகமாக இயக்கிக்கொண்டே, தனக்கான கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
சாலையைக் கவனித்துக் கொண்டு உடன் நடிக்கும் நடிகர்களின் உரையாடலுக்கும் பதிலளித்துக் கொண்டே அவர் நடித்தது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. இது சவாலான வேடம் என்பதை உணர்ந்து, முழுமையான ஒத்துழைப்பை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்தார். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!